மியன்மார் - தாய்லாந்து பயங்கரவாத எல்லையில் சிக்கிய 56 இலங்கையர்கள்!
இலங்கை, இந்தியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து மியன்மார் - தாய்லாந்து எல்லைக்கு உட்பட்ட பயங்கரவாத எல்லையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இலங்கை, இந்தியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து மியன்மார் - தாய்லாந்து எல்லைக்கு உட்பட்ட பயங்கரவாத எல்லையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்குள்ள இலங்கை மக்களுடன் தொடர்பை பேணி வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த பகுதியில் 56 இலங்கை மக்கள் வசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் தகவல் தொழிநுட்ப துறையில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து அவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் குறித்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.