இலங்கையில் மதுபானசாலைகள் திறப்பு நேரத்தில் மாற்றம்?

இலங்கையில் அனுமதி பெற்ற மதுபானசாலைகள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மதுபானசாலைகள் திறப்பு நேரத்தில் மாற்றம்?

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவினால்  வெளியிடப்பட்டுள்ளது.

மதுவரி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 32, உப பிரிவு 1 (இது 52 ஆவது அதிகார சபையின்) கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, உள்ளூர் மதுபான உரிமங்கள் கொண்ட மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் இரவு 9 மணி வரையும், வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை உரிமம் கொண்ட மதுபான சாலைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், சுற்றுலா வாரியத்தின் அனுமதி இல்லாத விருந்தக உரிமங்கள் முற்பகல் 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. .

மேலும், சுற்றுலா வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற விருந்தக உரிம வகைப்பாட்டின் அடிப்படையில் நள்ளிரவு 12 அல்லது அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும்.

அத்துடன், விடுதி உரிமம் உள்ள கிளப்புகள் மற்றும் களியாட்ட விடுதிகள் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்