ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து வழமைக்கு!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து வழமைக்கு!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் நுவரெலியா நகரங்களில் இருந்து ஹட்டனுக்கான வழியில் ஏற்பட்டிருந்த தடை காரணமாக மாற்று வழிகளில் போக்குவரத்துகள் இடம்பெற்றன.

பாதை சீரமைக்கப்பட்டிருந்த போதும், சாரதிகள் அந்த பாதை வழியாக மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.