IMF இரண்டாவது தவணைக் கடன் - அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும்!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கொடுப்பனவு தொடர்பில் அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

IMF இரண்டாவது தவணைக் கடன் - அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும்!

மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இலங்கை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். 

கொள்கை வட்டி வீதங்களை குறைத்ததன் பலனை வணிக வங்கிகள் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். 

நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 9 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளது. 

இது முன்னதாக 10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

 அத்துடன், துணைநில் கடன் வசதி வீதத்தை இலங்கை மத்திய வங்கி 10 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது

இதனை முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை 11 சதவீதமாக நிர்ணயித்திருந்தது.