சந்தேகநபரை பிடிக்க சென்று ஆற்றில் குதித்த பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!
குற்றச்செயல் ஒன்று தொடர்பான சந்தேகநபர் ஒருவரை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஜா-எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்ற போது அவர் தப்பித்து ஆற்றில் குதித்துள்ளார்.
இதன்போது தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி காணாமல் போயிருந்தார்.
அவர் நேற்று முதல் தேடப்பட்ட நிலையில் இன்று அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
26 வயதான சாவகச்சேரியை சேர்ந்த குறித்த அதிகாரி ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியிருந்தார்.