சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறி விலை

சடுதியாக அதிகரித்துள்ள  மரக்கறி விலை

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மலையக மரக்கறிகளின் மொத்த விலை இன்று உயர் பெறுமதியை எட்டியிருந்தது.

அதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தாழ்நில மரக்கறிகளின் விலையில் சில குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தக்காளி, தேசிக்காய் ஆகியவற்றின் மொத்த விலை 80 ரூபாய் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு கிலோ பாகற்காயின் மொத்த விற்பனை விலை 450 முதல் 500 ரூபா வரையிலும், கத்தரிக்காய் ஒரு கிலோ 350 முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ வெண்டைக்காய் 250 முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.