முதலை கடிக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில்!
திருகோணமலை - தம்பலகாமம், பாலம்போட்டாறு பகுதியில் முதலை கடிக்கு உள்ளான நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மேய்ச்சலுக்காக குறித்த பகுதிக்கு சென்றிருந்தபோது அவர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பொதுமக்களால் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தம்பலகாமம் - சிப்பித்திடல் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.