சமன் கொல்லாவின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்!

சமன் கொல்லாவின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்!

துபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சமன் கொல்லாவின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்பலாகொடை - இடம்தொட பகுதியில் காணப்படும் வீட்டின் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு உந்துருளியில் வருகைத்தந்த அடையாளந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

அத்துடன், குறித்த துப்பாக்கி சூட்டில் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.