மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை  மருதானையில்

மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை  மருதானையில்

இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை மருதானை தொடருந்து திணைக்கள களஞ்சியசாலை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்சார முச்சக்கரவண்டிகள் உற்பத்தி மற்றும் எரிபொருள் முச்சக்கரவண்டிகளை மின்சார வண்டிகளாக மாற்றும் தொழிற்சாலை வளாகம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படும் இந்த முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் இந்த தொழிற்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இதனைவிட பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டியை இரண்டு மணி நேரத்திற்குள் மின்சார முச்சக்கரவண்டிகளாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தத் தொழிற்சாலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஒரு மாதத்தில் நூறு முச்சக்கர வண்டிகளை மின்சாரமயமாக்கும் திட்டம் இந்த தொழிற்சாலையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.