படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுற்றுவட்டத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது மாணவர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.