ஒவ்வொரு 08 மணித்தியாலங்களிலும் 03 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
இலங்கையில் ஒவ்வொரு 08 மணித்தியாலங்களிலும் 03 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் தலைவர் வைத்தியர் சமிதா சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு 08 மணித்தியாலங்களிலும் 03 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் தலைவர் வைத்தியர் சமிதா சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
உலக அளவில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 01 முதல் 10 வயது வரையிலான சிறுவர்களே.
ஆனால் இலங்கையில் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் 20 மற்றும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.