கடல் எல்லையை மீறிய ஒன்பது மீனவர்கள் கைது - மு.க.ஸ்டாலின் அதிருப்தி!
கடல் எல்லையை மீறியதாக குற்றம்சுமத்தப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடல் எல்லையை மீறியதாக குற்றம்சுமத்தப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்களே கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நேற்றிரவு (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடரும் இந்த சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலையும் ஏமாற்றமும் தெரிவித்துள்ள ஸ்டாலின் நீண்ட காலமாக நிலவி வரும் இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட தொடர்புகள் இருந்த போதிலும், களத்தில் நிலைமை மாறாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அடுத்த மாதம் ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் சங்கங்களின் மாநில ரீதியான மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும், அதில் இலங்கையின் கடற்படையினரின் கைது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா எஸ் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.