உணவு வகைகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

உணவு வகைகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

இதன்படி, ஒரு கப் தேநீரின் விலை 10 ரூபாவாலும், கொத்து ரொட்டி மற்றும் முட்டை ரொட்டியின் விலை 20 ரூபாவாலும் குறைக்கப்படவேண்டும்.

அத்துடன், மதிய உணவு பொதியின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும். அரசாங்கத்தின் விலை சூத்திரத்திற்கு அமைய ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த குறைப்பு நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும், எனவே அனைத்து வர்த்தகர்களும் விலைகளை குறைத்து இந்த சேமிப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.