முத்துராஜவெலவில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம்?
நாட்டின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை முத்துராஜவெல பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதன் நிர்மாணப் பணிகளை அடுத்த வருடத்தில் ஆரம்பித்து, 2026 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 350 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகளுக்காக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.