செயற்கை நுண்ணறிவால் உலகில் இழக்கப்படும் தொழில்கள் 60% - IMF
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் 60% தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இந்த செயற்கை நுண்ணறிவு உலக நாடுகளிடையே சமதுவமின்மையை மோசமாக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 60 சதவீத தொழிற்துறைகளை பாதிக்குமெனவும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், தற்போது மனிதர்களால் செயல்படுத்தப்படும் முக்கிய பணிகளைச் செய்யும் திறனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளமையினால் தொழிலாளர்களுக்கான தேவையும் எதிர்காலத்தில் குறைவடையலாம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.