ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் கொள்கைகள் வானமும் பூமியும் போன்றது!
சோசலிசம் என்று கூறும் நாடுகளில் சோசலிசம் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
சோசலிச, கம்யூனிச சோசலிச நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள் தீவிர முதலாளித்துவத்தையே செயல்படுத்தி வருகின்றன.
சீனாவில் அமெரிக்காவை விட முதலாளித்துவம் அமுல்படுத்தப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு நாட்டைக் கட்டியெழுப்பவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சோசலிசம் வழியல்லாது,
முதலாளித்துவமே ஒரே வழி.
ஐக்கிய தேசியக் கட்சி க்ரோனி முதலாளித்துவத்தை பின்பற்றும் அதேவேளையில் ஐக்கிய மக்கள் சக்தி மனிதாபிமான முதலாளித்துவத்தைப் பின்பற்றுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இங்கு தான் வேறுபடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி சமூக ஜனநாயகக் கொள்கையை நம்புகிறது என்றும் அது மனிதாபிமான முதலாளித்துவம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பில் இந்த அரசாங்கம் பெரும் செல்வந்தர்களை கைவிட்டு, உழைக்கும் மக்கள் மீது வரிகளை சுமத்தியது.
இது மனிதாபிமானமற்ற முதலாளித்துவம் என்றும், வங்குரோத்தான நாட்டில் தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்றாலும், அனைத்து தியாகங்களையும் உழைக்கும் மக்களின் தோள்களில் சுமத்தி பெரும் பணக்காரர்களைப் பாதுகாக்கும் மனிதாபிமானமற்ற போக்கில் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதன் பிரகாரமே, ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருப்பதாகவும், இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையை வெளியீட்டு வைக்கும் Blue Print நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-