⛔️BREAKING NEWS⛔️ சர்வதேச நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் செயலிழப்பு - முக்கிய சேவைகள் பாதிப்பு!

⛔️BREAKING NEWS⛔️  சர்வதேச நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் செயலிழப்பு - முக்கிய சேவைகள் பாதிப்பு!

சர்வதேச ரீதியில் பல நாடுகளில் தகவல் தொழில்நுட்ப செயலிழந்தமையால் அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமான மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தின் செய்ற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் உட்பட அமெரிக்காவில் உள்ள பல விமான நிலையங்கள் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களும் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் காரணமாக முக்கிய வங்கிகள், ஊடகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் கட்டண முறைமைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு சில மைக்ரோசாஃப்ட் சேவைகளுக்கும் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அலாஸ்கா, அரிசோனா, இந்தியானா, மினசோட்டா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் ஓஹியோ உள்ளிட்ட பல அமெரிக்க மாநிலங்களில் 911 சேவைகள் தடைபட்டுள்ளதோடு லண்டன் பங்குச் சந்தையில் சேவைகள் பாதிக்கப்பட்டன

ஸ்கை நியூஸ் ஒளிபரப்பப்படவில்லை எனவும், உலகளாவிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக்கிலும் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு மூன்று இந்திய விமான நிறுவனங்கள் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.