Whatsapp அறிமுகம் செய்துள்ள புதிய வசதி - ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள்?

Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Whatsapp அறிமுகம் செய்துள்ள புதிய வசதி - ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள்?

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான Whatsapp செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து வருகின்றது.

Smart கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு Whatsapp செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. 

பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகளை அவ்வப்போது Whatsapp செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட Whatsapp channel, Log Short உள்ளிட்ட வசதிகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்நிலையில் Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். 

'இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். கைத்தொலைபேசி இரண்டு Whatsapp செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

 இந்த வசதி முதற்கட்டமாக அன்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வசதியின் பயன்கள்: 

முன்னதாக ஒருவர் இரண்டு கைத்தொலைபேசிகளில் எண்கள் வைத்திருந்தால் தனி தனியாக இரண்டு Whatsapp செயலிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய வசதியின் மூலம் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடியும். 

சில சாதனங்களில் இரண்டு Whatsapp செயலிகள் தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருந்ததால் பயனர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். 

ஒரு சிலர் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த Update மூலம் அவர்களின் சிக்கல் தீர்ந்துள்ளது.

இந்த வசதியை Whatsapp அமைப்புகளில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்திற்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.