திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வடக்கிற்கான ரயில் நேர அட்டவணை அமுல்!

திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வடக்கிற்கான ரயில் சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வடக்கிற்கான ரயில் நேர அட்டவணை அமுல்!

இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40 ற்கு காங்கேசன் துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் இன்று முதல் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதுதவிர சனிக்கிழமை மாத்திரம் காலை 05.20க்கு கொழும்பு கோட்டை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் இன்று முதல் காலை 5.30 அளவில் பயணத்தை ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.