நீரிழிவு நோயால் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகள் பாதிப்பு!
கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஓர்மோன்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.
'நாம் அனைவரும் நீரிழிவு நோயின்றி வாழ முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
அதிக சர்க்கரை உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் இருந்தால், கொலஸ்ட்ரால் இருந்தால், கழுத்துப் பகுதியில் கருப்பு நிற தழும்பு இருந்தால், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம்.”
அத்துடன், நீரிழிவு நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் உதித புளுகஹபிட்டிய விளக்கமளித்தார்.