சிறுவர்களுக்கு நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிப்பு!

 சிறுவர்களுக்கு நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் சிறு பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக சிறுவர் வைத்திய கல்லூரியின் செயலாளர் டாக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகம் காணப்படுவதாகவும் அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாகப் பரவுவதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், சிறு குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பது மிகவும் அவசியமானதென அவர் மேலும் தெரிவித்தார்.