மைத்திரிக்கு எதிரான வழக்கு - ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

மைத்திரிக்கு எதிரான வழக்கு - ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகாமையால் இந்த ஒருதலைப்பட்ச விசாரணை தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத் சந்திரவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.

இதனையடுத்து மைத்ரிபால சிறிசேன, கடந்த மே 12 அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அதேநேரம், சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை கட்சியின் புதிய தலைவராக நியமித்தது.