பொதுமக்களுக்கு நியாய விலையில் மருந்துகளை வழங்குமாறு பரிந்துரை!

பொதுமக்களுக்கு நியாய விலையில் மருந்துகளை வழங்குமாறு பரிந்துரை!

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை வழங்குமாறு கணக்காய்வாளர் திணைக்களம் சுகாதார அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் திணைக்களம், இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்தமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

அதேநேரம், மருந்துகளின் தரத்தை தொடர்ந்து பேணுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துமாறும் கணக்காய்வாளர் நாயகம் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.