பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் அபாயம் - எச்சரிக்கும் வைத்தியர்கள்!

பாடசாலை மாணவர்களுக்கு அண்மைக் காலமாக கண்நோய், டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டன.

பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் அபாயம் -  எச்சரிக்கும் வைத்தியர்கள்!

தற்போது புதிய நோய் தொற்று ஏற்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். 

மாணவர்களின் வாய்ப் பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் ஏற்படுமாயின் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வாய் சுகாதாரத்தை மிக கவனத்தோடு பராமரிக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்