காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு - விரைவான அறிக்கை கோரிய அமைச்சர்!

அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன விரைவான அறிக்கையை கோரியுள்ளார்.

காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு - விரைவான அறிக்கை கோரிய அமைச்சர்!

இந்தச் சம்பவம் மருத்துவ அலட்சியம் குறித்து ஆபத்தான கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஏனெனில் நோயாளிக்கு உயிர் காக்கும் ஒக்ஸிஜனுக்குப் பதிலாக அதிக அளவு காபனீரொட்சைட் வாயு தவறாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆய்வுகளின்படி, வாயுக்களின் கலவைகளின் போது ஏற்படும் அலட்சியம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அத்துடன் நோயாளி ஒருவர் உயிரை இழக்கவும் நேரிடலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.