கொழும்பை அண்டி 10,000 வீடுகள் நிர்மாணம்!

2024ம் ஆண்டில் கொழும்பு மாநகரை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பை அண்டி  10,000 வீடுகள் நிர்மாணம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 6,500 வீடுகளும், நடுத்தர வர்க்கத்தினருக்கு 3,500 வீடுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 11 வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் 6 வீடமைப்புத் திட்டங்களுக்கு சீன அரசாங்கம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.