காலை 7 மணி வரையான முடிவுகளின் படி 44 ஆசனங்களை திசைக்காட்டி கைப்பற்றியது!

காலை 7 மணி வரையான முடிவுகளின் படி 44 ஆசனங்களை திசைக்காட்டி கைப்பற்றியது!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி இன்று காலை 7 மணி வரையான தரவுகளின் அடிப்படையில் திசைகாட்டியை சின்னமாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தி (5,000,296) 44 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (1,541,116) 11 ஆசனங்களையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி (382,062) ஓர் ஆசனத்தையும், நாமல் ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (255,176) 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்தநிலையில். நடைபெற்ற தேர்தலின் பலனாக பல முன்னாள் அமைச்சர்கள் தமது வாக்கு வங்கிகளை இழந்துள்ளனர்.

பெரும்பாலும் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கோலோச்சியிருப்பது புலப்படுகிறது.

இதனிடையே, வெற்றி பெற்று தொகுதிகளிலும், தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் அமைதியான போக்கை கடைபிடிக்குமாறும் ஜனாதிபதி அனுரகுடமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பின்னடைவை சந்தித்த ஏனைய கட்சி ஆதரவாளர்களை தூற்றுதல் மற்றும் அவதூறாக பேசுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.