106 ஆசனங்களுடன் ஆட்சி அதிகாரத்தை நெருங்கும் திசைக்காட்டி!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி இன்று முற்பகல் 10 மணி வரையான தரவுகளின் அடிப்படையில் திசைகாட்டியை சின்னமாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தி (6,842,223) 106 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (1,966,875) 28 ஆசனங்களையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி (493,359) 3 ஆசனங்களையும், நாமல் ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (350,287) 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதுதவிர, தமிழரசுக் கட்சி (252,548) 3 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 5 ஆசனங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில். நடைபெற்ற தேர்தலின் பலனாக பல முன்னாள் அமைச்சர்கள் தமது வாக்கு வங்கிகளை இழந்துள்ளனர்.
பெரும்பாலும் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கோலோச்சியிருப்பது புலப்படுகிறது.
புதிதாக அரசியலில் இணைந்து கொண்ட சில கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளன.