உயரமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் உள்ளதா?

உயரமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் உள்ளதா?

மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர புற்றுநோய் வகையாக மருத்துவ துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த பிரச்சினை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், சில சூழ்நிலைகளில் ஆண்களும் இந்த பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். 

சிகிச்சையில் தாமதம் மற்றும் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாததால் மார்பக புற்றுநோய் தீவிரமடைகிறது.

மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. 

அதிக உயரம் உண்மையில் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறதா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள், உடல் அமைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

NCBI -ல் வெளியிடப்பட்ட சில ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் உயரமான கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

மார்பக புற்றுநோயைத் தூண்டும் காரணிகளில் உயரமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், உயரம் மட்டுமே மார்பக புற்றுநோயை ஏற்படுத்தாது. 

மார்பகப் புற்றுநோய்க்கு உயரத்தைத் தவிர, வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

உடல் உயரம் அதிகரிக்கும் போது, ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படுகின்றன. 

இது மார்பக திசுக்களை பாதிக்கிறது. இது தவிர, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி (IGF-1) ஏற்படும் அபாயமும் உள்ளது. 

இதன் காரணமாக, செல்கள் வளரும் அபாயமும் அதிகரிக்கிறது.