மைக்ரோசொப்ட் செயலிழப்பால் Crowdstrike நிறுவனத்திற்கு 9 பில்லியன் டொலர் இழப்பு!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்ரைக்' (Crowdstrike) என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த தொழிநுட்ப குளறுபடிகள் (Update corrupt) காரணமாக மைக்ரோசொப்ட் சர்வர்கள் முற்றாக முடங்கின.
இதனால் தொலைத்தொடர்பு சேவை, போக்குவரத்து சேவைகள், பங்குச் சந்தை மற்றும் வங்கிகள் என்பன பாதிப்படைந்து வழமைக்கு திரும்பின.
இந்நிலையில், மைக்ரோசொப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ளதுடன் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில் சரிந்துள்ளன.
இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனத்திற்கு 9 பில்லியன் டொலர் சந்தை மூலதன இழப்பு ஏற்பட்டுள்ளது.