சீருடை - பாடப்புத்தகங்கள் விநியோகம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு!

அடுத்த வருடம் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.