பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் மோதல் - இருவர் காயம்!
மன்னார் - பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 2 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் எற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று இடம்பெற்றிருந்தது.
இதன்போதே குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.