பல்கலைக்கழக மானிடவியல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்!

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானிடவியல் துறையில்  பல்வேறு சீர்திருத்தங்கள்!

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

 பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், துணைவேந்தரை தவிர, பிரதி துணைவேந்தர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

நாட்டிலுள்ள பல விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு வந்து அரச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்