இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சி - கடல் மட்டத்திலிருந்து 3.1km உயரத்தில் நகர்கிறது!
இலங்கையின் தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் (Equatorial Indian Ocean) பிராந்தியத்தில் நேற்றைய தினம் காணப்பட்ட காற்று சுழற்சியானது இன்று (16.12.2023) காலை 08.30 மணியளவில் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இலங்கையின் தெற்காக கடல் மட்டத்திலிருந்து 3.1km உயரத்தில் நகர்வதாக முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி. க.சூரிய குமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்ச்சியாக மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவின் தெற்கு-தென்கிழக்காக, அதன் பின்னர் குமரிக்கடல் பிரதேசத்தின் தெற்கு பகுதி வழியாக எதிர்வரும் 18ஆம் திகதியளவில் அரபிய கடல் பிரதேசத்தை அடையும்.
இந்த நிகழ்வின் காரணமாக இலங்கையில் பல இடங்களில் மழை தொடரும் சாத்தியம் உள்ளது.
இதேவேளை சுமத்ரா தீவு அருகே அந்தமான் கடல் பிராந்தியத்தின் தெற்காகவும்
இந்திரா முனைக்கு தெற்காகவும் இன்னுமொரு புதிய காற்று சுழற்சி உருவாகி உள்ளது.
இதுவும் எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதிவரையான காலப் பகுதிகளில் மழையை ஏற்படுத்தும்.
இந்த புதிய நிகழ்வானது இலங்கைக்கு சற்று நெருக்கமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதன் காரணத்தினால் மழையின் அளவும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இன்று (16.12.2023) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:????
(கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக மத்தளை விமான நிலையத்தில் 126.6mm மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது)
அம்பாறை மாவட்டம்:
பொத்துவில் 65.1mm,
அம்பாறை 49.7mm,
இக்கினியாகலை 90.5mm,
எக்கல் ஓய 40.0mm,
பன்னலகம 34.7mm,
மகா ஓய na,
பாணமை 87.1mm,
லகுகல 61.2mm,
திகவாவி 40.0mm,
அக்கரைப்பற்று 44.0mm, இலுக்குச்சேனை 20.3mm,
சாகமம் 65.7mm,
றூபஸ்குளம் 48.2mm,
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 19.2mm.
மட்டக்களப்பு மாவட்டம்:
மட்டக்களப்பு நகர் 40.2mm,
உன்னிச்சை 41.0mm,
உறுகாமம் 85.6mm,
வாகனேரி 69.2mm,
கட்டுமுறிவுக் குளம் 35.0mm,
பாசிக்குடா 25.0mm.
திருகோணமலை மாவட்டம்:
திருகோணமலை 28.9mm,
கடற்படைத்தளம் 14.7mm,
குச்சவெளி 20.8mm,
பாலம்பட்டாறு 13.4mm,
கந்தளாய் 33.8mm.
வட மாகாணம்:
யாழ் மாவட்டம்:
யாழ்ப்பாணம் 13.1mm,
அச்சுவேலி 18.4mm,
பருத்தித்துறை 3.4mm,
நயினாதீவு 11.2mm,
நீர் வழங்கல் நிலையம் 12.6mm,
நீர்ப்பாசன திணைக்களம் 11.0mm,
நெடுந்தீவு 9.0mm,
ஆணையிறவு 13.7mm,
சாவகச்சேரி 7.1mm,
தெல்லிப்பழை 9.9mm,
அம்பன் 6.5mm,
கிளிநொச்சி மாவட்டம்:
கிளிநொச்சி 15.8mm,
இரணைமடுக்குளம் 20.3mm.
முல்லைத்தீவு மாவட்டம்:
முல்லைத்தீவு 13.0mm,
அலம்பில் 45.6mm,
ஒட்டுசுட்டான் 29.7mm,
வள்ளிபுனம் 13.3mm.
அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவு செய்யப்பட்ட மழை வீழ்ச்சிகளின் அளவுகள் இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.