ஹமாஸின் தவறினால் கொல்லப்பட்ட பணயக்கைதிகள்!

காசாவில் தங்களது தரப்பினர் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பணயக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸின்  தவறினால்  கொல்லப்பட்ட பணயக்கைதிகள்!

22, 26 மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷேஜாயா பகுதியில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஹமாஸ் தரப்பினரால் நூற்றுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில் காணாமல் போயுள்ளவர்களை கண்டறிவதும் சகல பணயக் கைதிகளையும் மீட்பதே தங்களது பிரதான நோக்கமாகும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

வர்த்தக வாணிபச் செய்தி 

இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 1.6 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இதன்படி, இலங்கையின் விவசாயத் துறையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

தொழில்துறை உற்பத்தியில் 0.3 சதவீத அதிகரிப்பும் சேவைகள் துறையில் 1.3 சதவீத அதிகரிப்பும் பதிவாகியுள்ளன. 

 இலங்கையின் பொருளாதாரம் 2022ஆண்டு 7.8 சதவீதமாக சுருங்கிய நிலையில் இந்த ஆண்டு 3.6 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.