சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!
கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் மின் மார்க்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.
கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் மின் மார்க்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களுக்குள் மின் சீராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சாரம் விநியோகம் பல பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஏனைய பகுதிகளுக்கும் விரைவில் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார தடைக்கான காரணம் >>>
இலங்கையில் பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சில மணி நேரத்தில் மின்சார சீரமைப்பு பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் இந்த மின்சார தடை ஏற்பட்டது.
மின்சாரத் தடை காரணமாக சில பிரதேசங்களில் நீர் விநியோகத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டன.
பிந்திக்கிடைத்த செய்தி >>>
இலங்கையில் இன்று (09) மாலை ஏற்பட்ட பாரிய மின்தடை தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
மின்சாரத்தடைக்கு உள்ளான பல பிரதேசங்களுக்கு வெற்றிகரமாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.
மற்ற அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தடைப்பட்ட மின்சார விநியோகத்தை முழுமையாக மீட்பதற்கு தோராயமாக இரண்டு மணித்தியாலங்கள் ஆகும் என மின்சார சபை அறிவித்துள்ளது.