இலங்கை கல்வியமைச்சின் இணையத்தளத்தை முடக்கிய A/L மாணவன்!

இலங்கை கல்வியமைச்சின் இணையத்தளத்தை முடக்கிய A/L மாணவன்!

இலங்கை கல்வியமைச்சின் இணையத்தளம் இனந்தெரியாத Hackerஆல் அத்துமீறி நுழைந்து முடக்கப்பட்டுள்ளது.

அதில் "UNKNOWN EEE" என்ற பெயரால் ஊடுருவிய நபர், கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு செய்தியை அனுப்பி உள்ளார்.

தான் பொறுப்பான குடிமகன் மற்றும் உயர்தர மாணவர் எனக் கூறி உள்ள, ஹேக்கர், தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த அத்துமீறல் முறைபாடளிக்கப்பட்டதாக வலியுறுத்தியுள்ளார்.

“என் பெயர் அநாமதேய EEE மற்றும் நான் தற்போது உயர் தரத்தில் படித்து வருகிறேன்.

உங்கள் இணையத்தளத்தில் அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிக்கவும்.

ஆனால் உங்கள் இணையத் தளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. 

ஒரு இலங்கை பிரஜை என்ற வகையில் எனது நாட்டின் பாதுகாப்பிற்காக இதை நான் தெரிவிக்கிறேன். 

அதை சரிசெய்யவும் நன்றி” என்று கல்வி அமைச்சின் இணையதளத்தில் ஹேக்கரால் காட்டப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.