மறு அறிவித்தல் வரை மூடப்படும் களனி பல்கலைக்கழகம்!
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
குறித்த பல்கலைக்கழகத்தின் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.