உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்  தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைய, 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.