பெரும்பாலான பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) மாலை கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) மாலை கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
அதிகபட்சமாக, சங்கானை பிரதேச செயலக பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த 2683 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 974 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 310 குடும்பங்களை சேர்ந்த 940 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 117 குடும்பங்களை சேர்ந்த 439 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.