பெரிய வெங்காயத்தின் விலை அடுத்த  வாரத்தில் குறையும் சாத்தியம்?

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலை அடுத்த  வாரத்தில் குறையும் சாத்தியம்?

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தேவையான பெரிய வெங்காயத்தை மூன்று மாதங்களுக்கு கையிருப்பில் வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

பெரிய வெங்காயத்திற்கான பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு 750 டாலரில் இருந்து 850 டாலராக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி அடுத்த வாரம் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.