அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி!
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி, சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (07) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 87 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 68 சதமாக இருந்தது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 78 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 333 ரூபாய் 07 சதமாக இருந்தது.