உடவளவ நீர்த்தேக்கத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
உடவளவ நீர்த்தேக்கத்தின் பிட்டபான பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக அந்த நீர்த்தேக்கத்திற்கு மேலாக செல்லும் வீதி இன்று முதல் மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என்று மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை குறித்த வீதியின் ஒரு மருங்கு மாத்திரம் திறக்கப்படும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் மாதம் 14ஆம் திகதி வரை மீண்டும் வீதி முற்றாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024.01.15 ஆம் திகதி (ஜனவரி 15ஆம் திகதி) வீதி முற்றாக திறக்கப்படும் என்று மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன கீழ் பிரிவில் உள்ள மூன்று குடியிருப்புகள் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பதினான்கு (14) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மண் சரிவால் குறித்த பிரதேசம் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.