ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம் எழுதிய இந்தியாவில் உள்ள ஆயுள் கைதி!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழக ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
சாந்தன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் அவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சாந்தன், சில நாட்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன்.
கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை.
அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன்.
ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று சாந்தன் குறிப்பிட்டுள்ளார்
எனவே தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையைப் புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு நாடு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற இலங்கைத் துணை உயரஸ்தானிகருக்கும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.
இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என்று சாந்தன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோ ரியுள்ளார்.