மனம்பிடிய விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பணிப்பு!
கதுருவெல,மனம்பிடிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை!
கதுருவெல, மனம்பிடிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை!
பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்து மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளானது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலன்னறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறு தெரிவித்தார்.
முன்னைய செய்தி >>>
பொலன்னறுவை – மனம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 40க்கும் அதிகமானவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கதுருவலையில் இருந்து அக்கறைப்பற்று நோக்கி பயணித்த பேருந்தே நேற்றைய தினம் இரவு 7.30 அளவில் த்துக்குள்ளானது.