பெண்களை விட ஆண்களிடையே ஏழு மடங்கு அதிகரித்த சமூக நோய்!
இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே, சமூக நோய் பாதிப்பு ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே, சமூக நோய் பாதிப்பு ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல் வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதான பத்திரன தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் மொத்தம் 607 எய்ட்ஸ் உள்ளிட்ட சமூக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,
இது முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.