இலங்கையின் சுழல் ஹைதராபாத் நோக்கி நகர்ந்தது!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் டுபாயில் நடைபெற்றது. இந்தநிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோமன் பவல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சுழல் ஹைதராபாத் நோக்கி நகர்ந்தது!

அவர் 7.40 கோடி இந்திய ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியா அணியின் ட்ரெவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் 6.80 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஹெரி புரூக் 4 கோடி ரூபாய்க்கு டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் சகல துறை வீரரான வனிது ஹசரங்க 1.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய விலைக்கு வாங்கப்பட்ட வீரராக அவுஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் மாறியுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க்குக்கு  2 கோடி இந்திய ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆரம்பம் முதல் இறுதிவரை கடும் போட்டி நிலவியது.

முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மிட்செல் ஸ்டார்க்கை பெற்றுக்கொள்ள கடும் போட்டியிட்டனர்.

இந்தநிலையில், மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி இந்திய ரூபாய்க்கு  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெறுமையை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்

அவர் 20.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

ஆரம்பம் முதல் பெட் கம்மின்ஸை வாங்குவதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியது.

இந்தநிலையில் இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.5 கோடி இந்திய ரூபாய்க்கு பெட் கம்மின்ஸை வாங்கியுள்ளது.

நியூசிலாந்து அணியின் வளர்ந்து வரும் வீரரான ரச்சின் ரவீந்திரா சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 1.8 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

ரச்சின் ரவீந்திராவிற்கு 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 1.8 கோடி இந்திய ரூபாய்க்கு அவரை வாங்கியுள்ளது.

அத்துடன் 4 கோடி இந்திய ரூபாய்க்கு சர்துல் தாக்குரை சென்னை அணி ஏலத்தில் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஏலத்தில் இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க 1.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியினால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.