ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம்!
சீனாவில் இடம்பெற்று வரும் ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில், ரீ-47 பிரிவில் மதுர சுபசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் குறித்த போட்டித் தூரத்தை 50.38 செக்கன்களில் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.