மற்றுமொரு சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

மற்றுமொரு சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஆறு ஓட்டங்களை விளாசிய இந்திய வீரர்களின் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இவர் குறித்த டெஸ்ட் தொடரில் இதுவரையில் 26 ஆறு ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

9 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இவர் 1000 ஓட்டங்களை கடந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.