முகேஸ் அம்பானியை முந்தி இந்தியாவின் முதன்மை பணக்காரரான கௌதம் அதானி!
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை மீட்டெடுத்ததையடுத்து, கடந்த ஆண்டு கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 95வீதத்தால் அதிகரித்து 11.6 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது முகேஸ் அம்பானிக்குப் பதிலாக அவர் முதன்மை இந்திய பணக்கார மாற உதவியது என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அம்பானியின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 25வீதத்தால் அதிகரித்து 10.14 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின் படி (Hurun India Rich List) இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2023இல் வெளியிடப்பட்ட ஹுருன் அறிக்கையின்படி, அதானியின் சொத்து மதிப்பு 57 வீதத்தால் குறைந்து 4.74 இலட்சம் கோடியாக ரூபாயாக இருந்தது.
அம்பானியின் சொத்து மதிப்பு 8.08 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற வணிக ஆய்வு நிறுவனம், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அதானியின் நிகர சொத்து மதிப்பு கடுமையாக சரிந்திருந்தது.
நடிகர் சாருக்கான்
இந்தநிலையில், தற்போதைய ஹுருன் அறிக்கையின்படி சிவ் நாடார் மற்றும் குடும்பத்தினர் 3.14 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது பணக்காரர்களாக உள்ளனர்.
அதேநேரத்தில், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் சைரஸ் பூனவல்லா 2024ஆம் ஆண்டில் 2.89 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நடிகர் சாருக்கான் 7,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டியலில் அறிமுகமாகியுள்ளார்.